ஜெயலலிதா வசித்த வேதா நிலையம்: நினைவு இல்லமாக மாற்றக் கோரிய மனு தள்ளுபடி.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா வசித்த "வேதா நிலையம்' இல்லத்தை அவரது நினைவு இல்லமாக மாற்ற கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், போயஸ் தோட்டத்தில் உள்ள அவருக்குச் சொந்தமான 'வேதா நிலையம்' இல்லத்தை அதிமுகவைச் சேர்ந்தவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். அவர்கள் யாரும் ஜெயலலிதாவின் சட்டரீதியான வாரிகள் கிடையாது. ஆகையால், அவர் வசித்த வீட்டை நினைவு இல்லமாக மாற்றக் கோரி மனு அளித்தேன்.
இந்த மனு நீதிபதிகள் ஹூலுவாடி ஜி.ரமேஷ், ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இதேபோன்ற கோரிக்கையுடன் ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்துள்ளது. ஆகையால், இந்த மனுவை விசாரணைக்கு ஏற்க முடியாது எனக் கூறி, தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
கருத்துகள் இல்லை