Header Ads

  • BREAKING



    சசிகலா மீதான தீர்ப்பு எதிர்பார்த்ததுதான்: சுப்பிரமணியன் சுவாமி.


    சசிகலா மீதான தீர்ப்பு எதிர்பார்த்ததுதான் என்று சுப்பிரமணியன்சுவாமி தெரிவித்துள்ளார்.

    சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் சசிகலா உட்பட 3 பேரும் குற்றவாளிகள் என உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. அத்துடன் சசிகலா, சுதாகரன், இளவரசியை விடுதலை செய்து கர்நாடக உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்.

    இந்நிலையில் சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து பாஜக எம்பி சுப்பிரமணியன்சுவாமி கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், சசிகலா மீதான தீர்ப்பு எதிர்பார்த்ததுதான். சசிகலா 4 ஆண்டு தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது என கருதினேன். 20 ஆண்டுகளுக்கு பின் சொத்துகுவிப்பு வழக்கில் வெற்றி பெற்றுள்ளேன் என்றார்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad