Header Ads

  • BREAKING



    பஞ்சாப், கோவா மாநிலங்களில் இன்று சட்டப் பேரவைத் தேர்தல்.

    பஞ்சாப், கோவா மாநிலங்களில் இன்று சட்டப் பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது.

    பஞ்சாப் கோவா மணிப்பூர் மாநில சட்டபேரவைகளின் பதவிக்காலம் மார்ச் 18 ஆம் தேதியும்,உத்தரகாண்ட் சட்டபேரவையின் பதவிக்காலம் மார்ச் 26 ஆம் தேதியும்,உத்திரப்பிரதேச சட்டப்பேகவையின் பதவிக்காலம் மே 27 ஆம் தேதியும் முடிவடைகிறது.

    இதையடுத்து, இந்த 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவையின் தேர்தல் அட்டவணையை கடந்த 4 ஆம் தேதியன்று தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி வெளியிட்டார். இதன்படி பஞ்சாப் கோவா மாநிலங்களில் பிப்ரவரி 4 ஆம் தேதியும், உத்திரப்பிரதேச சட்டப்பேரவை தேர்தல் பிப்ரவரி 11 ஆம் தேதி முதல் மார்ச் 8 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது.

    117 தொகுதிகளை கொண்ட பஞ்சாப் மாநிலத்தில் சிரோமணி அகாலிதளம், பாரதீய ஜனதா கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு 10 ஆண்டுகளாக தொடர்ந்து இக்கூட்டணியே ஆட்சி செய்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad