Header Ads

  • BREAKING



    எதிர்கட்சியினர் இல்லாமல் நடந்த வாக்கெடுப்பு: தப்பித்தது எடப்பாடி அரசு.

    சட்டப்பேரவையில் எதிர்கட்சி உறுப்பினர்கள் இல்லாத நிலையில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது.

    இதில், 122 உறுப்பினர்கள் ஆதரவுடன் எடப்பாடி பழனிசாமி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்றதாக சபாநாயகர் தனபால் அறிவித்தார். மறைமுக வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி ஓபிஎஸ் அணியினர், திமுக உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். திமுக உறுப்பினர்கள் அவை மாண்பை மீறியதாகக் கூறி சபாநாயகரின் உத்தரவின் பேரில் திமுக உறுப்பினர்கள் குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றப்பட்டனர். திமுக உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

    இதையடுத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பினை எண்ணிக்கை வாக்கெடுப்பு முறையில் சபாநாயகர் நடத்தினார். இதில், அவையில் இருந்த மொத்த உறுப்பினர்களில் 122 பேர் பழனிசாமி அரசுக்கு ஆதரவாகவும், 11 பேர் எதிராகவும் வாக்களித்தனர். இதையடுத்து எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்றது. இதனை தொடர்ந்து அவையை தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் ஒத்திவைத்தார்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad