Header Ads

  • BREAKING



    குடியேற்றக் கொள்கை தொடர்பாக புதிய உத்தரவு – டொனால்ட் டிரம்ப்.

    குடியேற்றக் கொள்கை தொடர்பாக அடுத்த வாரத்தில் புதிய உத்தரவை பிறப்பிக்க முடிவு செய்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சூசகமாக தெரிவித்துள்ளார். 7 இஸ்லாமிய நாடுகளுக்கு விதித்த தடைக்கு எதிரான வழக்குகளில் மாவட்ட மற்றும் மேல்முறையீட்டுக்கான சர்கியூட் நீதிமன்றங்கள் வழங்கிய தீர்ப்பு டிரம்புக்கு பெரும் பின்னடவை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பேசியுள்ள டிரம்ப், நீதிமன்றத்துக்கும், தமது உத்தரவுக்கும் இடையேயான யுத்தத்தில் வெல்வது நிச்சயம் என்று கூறியுள்ளார். நீதிமன்றம் எதிராக தீர்ப்பு வழங்கினாலும், தங்களுக்கு வேறு பல வழிகள் உள்ளது என்று தெரிவித்த டிரம்ப், நாட்டின் பாதுகாப்பு கருதி புதிய உத்தரவு கூட பிறப்பிக்கப்படும் என்று கூறியுள்ளார். நாட்டின் பாதுகாப்பு கூறுகளை ஆய்வு செய்வதில் கூடுதல் கவனம் செலுத்தி வருவதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad