Header Ads

  • BREAKING



    இந்திய விமான ஆணையத்தில் இளநிலை உதவியாளர் பணி.

    இந்திய விமான ஆணையத்தில் தீயணைப்பு பிரிவில் 2017-ம் ஆண்டிற்கான 147 இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
    நிறுவனம்: Airport Authority of India 

    மொத்த காலியிடங்கள்: 147

    பணியிடம்: தமிழ்நாடு, புதுச்சேரி. ஆந்திரா, தெலங்கனா, கர்நாடகா, கேரளா, லட்சசீவுகள்

    பணி: இளநிலை உதவியாளர் (தீயணைப்பு துறை) - Junior Assistant (Fire Department)

    தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் 3 வருட டிப்பளமோ அல்லது +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

    வயதுவரம்பு: பொது பிரிவினருக்கு 18 - 30க்குள் இருக்க வேண்டும். ஓபிசி பிரிவினருக்கு - 33க்குள்ளும், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 35க்குள்ளும் இருக்க வேண்டும்.

    சம்பளம்: மாதம் ரூ.12,500 - 28,500

    தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, ஓட்டுநர் தேர்வு, மருத்துவ பரிசோதனை மற்றும் பொறுமைக்கான தேர்வுகள் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

    தேர்வு மையம்: திருச்சி, ஹைதராபாத், மங்களூரு, திருவனந்தபுரம், அகத்தி 
    தேர்வுக்கட்டணம்: ரூ.100.

    விண்ணப்பிக்கும் முறை: www.airportsindia.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப மாதிரியை பதிவிறக்கம் செய்து தெளிவாக பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
    Regional Executive Director,
    Airports Authority of India,
    Southern Region,
    Chennai - 600027.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 31.03.2017

    முழுமையான விவரங்கள் அறிய www.airportsindia.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad