சபாநாயகர் வேண்டுமென்றே சட்டையைக் கிழித்துக் கொண்டார்: ஸ்டாலின் குற்றச்சாட்டு.
சபாநாயகர் தனபால் வேண்டுமென்றே தனது சட்டையைக் கிழித்துக் கொண்டதாக எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
பேரவையில் இருந்து பாதுகாவலர்களால் வெளியேற்றப்பட்ட ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, சபாநாயகர் அறைக்கு சென்ற என்னிடம், திமுக உறுப்பினர்கள் தனது சட்டையக் கிழித்து விட்டதாக சபாநாயகர் தனபால் கூறினார். தெரிந்தோ, தெரியாமலோ நடந்த இந்த தவறுக்குப் பொறுப்பேற்று மன்னிப்பு கோருவதாக சபாநாயகரிடம் தெரிவித்தேன். இதையடுத்து பேரவையை முறையாக நடத்தி ரகசிய வாக்கெடுப்பு மூலம் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துமாறு கோரிக்கை வைத்தோம். அவையிலிருந்து எங்களை வெளியேற்ற உத்தரவிட்ட சபாநாயகரின் உத்தரவுக்கு எதிராக அறவழியில் போராட்டம் நடத்திய எங்களை காவல்துறையினரை ஏவி குண்டுக்கட்டாகத் தூக்கி அடித்து உதைத்து துன்புறுத்தினர். சபாநாயகர் சட்டையை அவரே கிழித்துக் கொண்டார். பேரவையில் நிகழ்ந்த சம்பவங்கள் குறித்து ஆளுநரிடம் புகார் அளிக்க இருப்பதாக ஸ்டாலின் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை