Header Ads

  • BREAKING



    பா.ஜ.க. கூட்டணியில் இருந்து எந்த நேரத்திலும் விலகுவோம் – சிவசேனா.

    மகாரஷ்டிரா மாநில பா.ஜ.க. அரசின் செயல்பாடுகளில் அதிருப்தி அடைந்துள்ள சிவசேனா, எந்த நேரத்திலும் கூட்டணியில் இருந்து வெளியேறுவோம் என எச்சரித்துள்ளது. மகாராஷ்டிராவில் சிவசேனாவுடன் கூட்டணி அமைத்து பாரதிய ஜனதா கட்சி ஆட்சி நடத்தி வருகிறது. அரசின் பல்வேறு நடவடிக்கைகளை எதிர்த்து வரும் சிவசேனா தற்போது பகிரங்கமாக மிரட்டத்தொடங்கி இருக்கிறது. முதல்வர் பட்நவீசின் செயல்பாடுகள் வெளிப்படையாகவோ, திருப்தி அளிப்பதாகவே இல்லை என அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் மனிஷா கயண்டே சாடியுள்ளார். முதல்வரின் அக்கரையற்ற செயல்பாடுகளால் எந்த நேரத்திலும் கூட்டணியில் இருந்து சிவசேனா வெளியேறும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 63 எம்.எல்.ஏ.க்களை கொண்ட சிவசேனா ஆதரவை திரும்ப பெற்றால், பா.ஜ.க. ஆட்சி கவிழும் ஆபத்து ஏற்படும். 122 இடங்களை கொண்ட பா.ஜ.க. பெரும்பான்மை பலம்பெற மேலும் 22 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தேவை.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad