Header Ads

  • BREAKING



    வாக்குக்குப் பணம் பெறுவதை ஆதரித்துப் பேச்சு: பாரிக்கருக்கு மீண்டும் நோட்டீஸ்.

    வாக்குக்குப் பணம் பெறுவதை ஆதரித்துப் பேசியது தொடர்பாக விளக்கம் கேட்டு அனுப்பப்பட்ட நோட்டீஸýக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் அளித்த பதிலை ஏற்க தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது.
    இதையடுத்து, அவரிடம் மீண்டும் விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
    கடந்த மாதம் 29-ஆம் தேதி கோவா மாநிலம், சிம்பெல் தொகுதியில் பாஜக சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் மனோகர் பாரிக்கர் பேசியபோது, "யாராவது சிலர் தங்களது கட்சிகளுக்கு ஆதரவாக வாக்களிக்க ரூ. 500 அல்லது ரூ. 2,000 அளித்தால், அதைப் பெற்றுக் கொள்வதில் தவறில்லை. எனினும், தாமரைச் சின்னத்துக்கு (பாஜகவின் சின்னம்) வாக்களிக்கத் தவற வேண்டாம்' என்று கூறியதாகத் தெரிகிறது. 
     இதையடுத்து, அவரது பேச்சுக்கு பல தரப்பிலிருந்தும் கண்டனம் எழுந்தது.
    இதையடுத்து, அவருடைய பேச்சு குறித்து விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பிருந்தது. இதையடுத்து, பாரிக்கர் கடந்த வெள்ளிக்கிழமை அந்த நோட்டீஸýக்கு பதில் அனுப்பியிருந்தார்.
    அதில், "சிம்பெல் தொகுதியில் தான் பேசியது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. மேலும், கொங்கனி மொழியில் தான் பேசியதை மொழிபெயர்ப்பு செய்தபோது, தவறு நிகழ்ந்துள்ளது' என்று பாரிக்கர் கூறியிருந்தார்.
    எனினும், அவரது விளக்கத்தை ஏற்க தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது. இந்நிலையில், பாரிக்கர் மீண்டும் விளக்கம் அளிக்கக் கோரி அவருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
    அந்த நோட்டீஸில், "பாரிக்கரின் பேச்சு அடங்கிய சிடியை 3 உறுப்பினர்கள் அடங்கிய குழுவினர் ஆய்வு செய்ததில், வாக்குக்குப் பணம் பெறுவதை ஆதரித்து அவர் பேசியது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, பாரிக்கர் வியாழக்கிழமைக்குள் இறுதி விளக்கத்தை அளிக்க வேண்டும்' என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad