தலைமைச் செயலகம் முழுவதும் வரலாறு காணாத போலீஸ் பாதுகாப்பு.
தமிழக அமைச்சரவை மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு சட்டப் பேரவையில் நாளை நடைபெறுகிறது.
இதையொட்டி, பேரவை அமைந்துள்ள தலைமைச் செயலகம் முழுவதும் வரலாறு காணாத போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தலைமைச் செயலகத்துக்குள் அரசு அதிகாரிகள், பணியாளர்களின் வாகனங்களைத் தவிர்த்து பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட மற்றவர்களின் இரு, நான்கு சக்கர வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
பரபரப்பான அரசியல் சூழலுக்கு இடையே, இந்த நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவதால் தலைமைச் செயலம், மெரீனா கடற்கரை உள்ளிட்ட முக்கிய இடங்களில் வரலாறு காணாத அளவுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை