Header Ads

  • BREAKING



    சபாநாயகருக்கு வைகோ பாராட்டு.

    நாடாளுமன்ற மரபில் ரகசிய வாக்கெடுப்புக்கு இடமில்லை என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

    சட்டப்பேரவையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் குற்றஞ்சாட்டியுள்ள நிலையில் வைகோவின் அறிக்கை வெளியாகியுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் இதற்கு முன் 1952, 1972, 1988 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பை போன்றே தற்போதைய வாக்கெடுப்பும் நடந்துள்ளதாக வைகோ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்புகள் கூட குரல் வழி அல்லது டிவிஷன் முறையிலானதாகத்தான் இருந்துள்ளது என்றும் வைகோ விளக்கியுள்ளார். எனவே சபாநாயகர் தனபால் சட்டவிதிகள் அடிப்படையில் பாராட்டத்தக்க வகையில் வாக்கெடுப்பை நடத்தியுள்ளார் என்றும் வைகோ புகழ்ந்துள்ளார்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad