Header Ads

  • BREAKING



    லஞ்ச பணத்தை கையாடல் செய்ததாக உதவியாளரை தாக்கிய நில அளவையாளர்.

    கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நில அளவையராக பணிபுரிந்து வருபவர் கதிரேசன். இவர் பேரூர் செட்டிப்பாளையம் பகுதியில் உள்ள தனியார் நிலத்தை அளவை செய்ததற்கு லஞ்சமாக 20 ஆயிரம் ரூபாயை, அவரது உதவியாளர் நந்தகுமார் வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால், ஐந்தாயிரம் ரூபாயை மட்டும் நில அளவையாளரிடம் வழங்கி, மீதத்தை உதவியாளர் கையாடல் செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த நில அளவையாளர் நேற்று மாலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வைத்து தன் உதவியாளரை தாக்கியதாக சக ஊழியர்கள் சார்பில் தெரிவிக்கப்படுகிறது. நில அளவையாளர் தாக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.இதைத்தொடர்ந்து, சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்த, மாவட்ட நில அளவை துறை உதவி இயக்குனருக்கு, மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad