Header Ads

  • BREAKING



    தேர்தல் தகராறுகளை விசாரிக்க சிறப்பு நீதிபதிகள்: நாடாளுமன்ற குழு பரிந்துரை.

    தேர்தல் சமயங்களில் ஏற்படக் கூடிய தகராறுகளை உரிய காலத்துக்குள் தீர்த்துவைக்க சிறப்பு வழக்குரைஞர்களும், நீதிபதிகளும் நியமிக்கப்பட வேண்டும் என்று சட்ட விவகாரங்களுக்
    கான நாடாளுமன்றக் குழு பரிந்துரைத்துள்ளது.
    இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் அந்தக் குழு வியாழக்கிழமை அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்தது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
    தேர்தல் காலங்களில் நடைபெறும் தகராறுகள் தொடர்பான வழக்குகளை விசாரித்து உரிய காலத்துக்குள் தீர்ப்பு அளிப்பதற்கு ஏதுவாக சிறப்பு வழக்குரைஞர்களையும், சிறப்பு நீதிபதிகளையும் மத்திய அரசு நியமிக்க வேண்டும்.
    தேர்தல் ஆணையம் கடந்த 1999-ஆம் ஆண்டில் அப்போதைய மத்திய அரசுக்கு ஒரு கடிதத்தை எழுதியது. அதில், தேர்தல் காலங்களில் பெறப்படும் புகார் மனுக்களை விரைந்து விசாரிப்பதற்கு வசதியாக உயர் நீதிமன்றங்களில் கூடுதல் நீதிபதிகள் நியமிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது. 
    இதைச் செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்காக தேர்தல் சட்டங்களில் திருத்தம் செய்யவும் அந்தக் கடிதத்தில் ஆலோசனை தெரிவிக்கப்பட்டிருந்தது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, நாடாளுமன்றக் குழுவின் பரிந்துரைகளுக்கு தேர்தல் ஆணையம் ஆதரவு தெரிவித்துள்ளது. உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இக் குழுவின் பரிந்துரைகள் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றன.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad