Header Ads

  • BREAKING



    பாரத ஸ்டேட் வங்கிகளை ஒருங்கிணைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்.

    பாரத ஸ்டேட் வங்கியுடன் அதன் 5 துணை வங்கிகளை ஒன்றிணைக்கும் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது.

    எனினும், பாரதிய மகிளா வங்கியை ஸ்டேட் வங்கியுடன் இணைப்பது தொடர்பாக மத்திய அமைச்சரவை எந்த முடிவும் எடுக்கவில்லை.
    பாரத ஸ்டேட் வங்கியின் கீழ் ஸ்டேட் பாங்க் ஆஃப் பிகானீர், ஸ்டேட் பாங்க் ஆஃப் மைசூர், ஸ்டேட் பாங்க் ஆஃப் திருவாங்கூர், ஸ்டேட் பாங்க் ஆஃப் பாட்டியாலா, ஸ்டேட் பாங்க் ஆஃப் ஹைதராபாத் ஆகிய 5 துணை வங்கிகள் இயங்கி வருகின்றன.
    இந்த துணை வங்கிகள் அனைத்தையும் பாரத ஸ்டேட் வங்கியுடன் ஒருங்கிணைக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு, இதற்கான நடைமுறைகளை மேற்கொள்ளுமாறு பாரத ஸ்டேட் வங்கிக்கு கடந்த ஆண்டு அறிவுறுத்தியது. 
    அதன்படி, இந்த 5 வங்கிகளையும் பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அதற்கான திட்ட வரைவு தயாரிக்கப்பட்டது. இந்த திட்ட வரைவுக்கு பல்வேறு வங்கிகளின் வாரியங்களும் அண்மையில் ஒப்புதல் அளித்தன. இதனைத் தொடர்ந்து, இந்த திட்ட வரைவானது மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தத் திட்ட வரைவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
    இதுகுறித்து மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியதாவது:
    பாரத ஸ்டேட் வங்கியுடன் அதன் துணை வங்கிகளை ஒருங்கிணைப்பதன் மூலம் ரூ.37 லட்சம் கோடி முதலீட்டு மதிப்பில் ஒரு சர்வதேச தரத்திலான வங்கி உருவாகும். இதனால் அவ்வங்கியின் செயல்திறனும், உற்பத்தி திறனும் அதிகரிக்கும் என ஜேட்லி தெரிவித்தார்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad