Header Ads

  • BREAKING



    அதிமுக எம்எல்ஏ-க்களுக்கு வெளி மாநிலப் பாதுகாவலர்கள்.

    மதுராந்தகத்தை அடுத்த கூவத்தூர் நட்சத்திர விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ள அதிமுக எம்எல்ஏ-க்களை வெளி மாநிலப் பாதுகாவலர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    கூவத்தூர் தனியார் நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ள அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா தரப்பைச் சேர்ந்த எம்எல்ஏ-க்கள் இன்று பிற்பகல் 2 மணிக்கு சென்னைக்கு சென்றனர். மாலை 4.30 மணிக்கு சென்னை ஆளுநர் மாளிகையில் சட்டப் பேரவைக் குழுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி தலைமையில் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    பின்னர், இரவு 7 மணிக்கு மீண்டும் கூவத்தூர் நட்சத்திர விடுதிக்கு அதிமுக எம்எல்ஏ-க்கள் அனைவரும் வந்தனர். அவர்கள் அனைவரையும் வெளி மாநிலத்தைச் சேர்ந்த தனியார் பாதுகாப்பு படையினர் தீவிரமாகக் கண்காணிப்பில் தற்சமயம் ஈடுபட்டு வருகின்றனர். இங்குள்ள எம்.எல்.ஏகள் யாராவது தப்பியோடி பன்னீர்செல்வம் கோஷ்டிக்கு சென்றுவிடாமல் இருக்க இத்தகைய பாதுகாப்பு ஏற்பாடுகளை சசிகலா கோஷ்டியினர் முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை செய்து உள்ளனர். வடக்கு மண்டல ஐ.ஜி செந்தாமரை கண்ணன், மாவட்ட எஸ்.பி முத்தரசி, மகாபலிபுரம் டி.எஸ்.பி டேவிட் ஆகியோர் தலைமையில் காவல்துறையினர் கல்பாக்கம் முதல் கூவத்தூர் வரை தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad