Header Ads

  • BREAKING



    பிரீமியம் ஹெச்1பி விசாவுக்கு ஆறு மாத தடை விதித்தது அமெரிக்கா!

    நியூயார்க்அமெரிக்காவுக்கு பணி நிமித்தம் செல்வோருக்கு வழங்கப்படும் பிரீமியம் ஹெச்1பி விசாவை வழங்கும் நடைமுறைக்கு ஆறு மாதங்களுக்கு தற்காலிக தடை விதிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

    அமெரிக்காவுக்கு பணி அல்லது கல்வி பயில செல்வோர் சாதாரணமாக ஹெச்1பி விசாவுக்கு விண்ணப்பிக்கும் போது, முடிவு எடுக்கப்பட சாதாரணமாக 3 முதல் 6 மாதங்கள் வரை ஆகும். ஆனால் பிரீமிய நடைமுறையில் 1,225 டாலர் கூடுதலாக செலுத்தும் பட்சத்தில் 15 நாட்களில் விண்ணப்பத்துக்கு பதில் கிடைத்துவிடும்.

    ஆனால் தற்போது அமெரிக்காவின் இந்த தடை உத்தரவு வரும் ஏப்ரல் 3-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. அமெரிக்காவுக்கு ஹெச்1பி விசா வழங்கும் நடைமுறையில் அதிக அளவு நிறுவனங்கள் சேருவதைத் தவிர்ப்பதற்காக, பிரீமியம் ஹெச்1பி விசா நடைமுறையை அமெரிக்கா கையாளுகிறது. ஆனால் அதிலும் நெருக்கடிகள் ஏற்படுவதால்தான் அமெரிக்கா இந்தமுடிவை எடுத்துள்ளது.

    இத்துடன் 2018-ம் நிதி ஆண்டுக்கான ஹெச்1பி விசாக்கள் வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad