Header Ads

  • BREAKING



    ஃபோர்ப்ஸ் உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் 101 இந்தியர்கள் இடம்பிடிப்பு.

    உலக பெரும் பணக்காரர்கள் வரிசையில் 101 இந்தியர்கள் இடம்பெற்று இருப்பதாக, ஃபோர்ப்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது. உலக பெரும் பணக்காரர்கள் மற்றும் அவர்களது சொத்து மதிப்பை ஆண்டுதோறும் கணக்கிட்டு, ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டு வருகிறது. 2017ஆம் ஆண்டுக்கான உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ள ஃபோர்ப்ஸ் பத்திரிகை, அதில் 2 ஆயிரத்து 43 பேரை வரிசைபடுத்தியுள்ளது. இந்த பட்டியலில் 101 இந்தியர்கள் இடம்பெற்று இருப்பதாக கூறியுள்ள ஃபோர்ப்ஸ் பத்திரிகை, அதில் 20 பேர் வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் என்றும் தெரிவித்துள்ளது. இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அதிபர் முகேஷ் அம்பானி, உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் 33ஆவது இடத்தை பிடித்துள்ளார். ஆனால், கடந்த ஆண்டு 688ஆவது இடத்தில் இருந்த அவரது சகோதரர் அனில் அம்பானி, தற்போது 745ஆவது இடத்துக்கு பின் தங்கியுள்ளார். ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள இந்திய பெரும் பணக்காரர்கள் பட்டியலில் சாவித்ரி ஜிந்தால், ஸ்மிதா கிருஷ்ணா, கிரண் மசும்தார், லீனா திவாரி ஆகிய 4 பெண்களும் இடம்பெற்றுள்ளனர்.



    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad