Header Ads

  • BREAKING



    10 ஆம் வகுப்பு தேர்வுக்கு பின், மதிப்பெண் சான்றிதழ்களில் திருத்தம் செய்ய முடியாது -சென்னை உயர்நீதிமனறம்.

    10 ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதிய பின், மதிப்பெண் சான்றிதழ்களில் பிறந்த தேதி, பெயர் ஆகியவற்றில் திருத்தம் செய்ய முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.10, 12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்களில் திருத்தம் செய்ய குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டும், தேர்வுத்துறை செயலாளர் மறுப்பதால், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாரர் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு புதன்கிழமை விசாரணைக்கு வந்தபோது, எஸ்.எஸ்.எல்.சி. விதிகளின் படி, 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு பின், வயது மற்றும் பெயர்களில் திருத்தங்கள் செய்ய முடியாது என்று நீதிமன்றம் கூறியது. பிறந்த தேதியை மாற்ற வேண்டும் என்று தேர்வு துறை செயலாளருக்கு உத்தரவிட குற்றவியல் நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என தெரிவித்து வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad