Header Ads

  • BREAKING



    ரூ. 114 கோடி மோசடி: அமெரிக்காவைச் சேர்ந்த இருவருக்கு ஜாமீன் வழங்க மறுப்பு.

    செல்லிடப்பேசி கோபுரங்கள் நிறுவுவதாகக் கூறி, ரூ.114 கோடி வங்கி கடன் பெற்று மோசடி செய்த வழக்கில் தனியார் நிறுவன அதிகாரிகள் இருவரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    சென்னையைச் சேர்ந்த -சைலாக்- என்ற தனியார் நிறுவனம், ஆந்திரா வங்கியின் சென்னை பிரதான கிளையில், பல்வேறு மாநிலங்களில் 504 செல்லிடப்பேசி கோபுரங்கள் நிறுவுவதாகக் கூறி கோடி கணக்கில் கடனாகப் பெற்றது.

    ஆனால், 391 செல்லிடப்பேசி கோபுரங்கள் மட்டுமே அமைத்து வங்கிக்கு, ரூ. 114 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக அந்நிறுவனத்தின் இயக்குனர்கள் மீது, கடந்த 2016-ஆம் ஆண்டு சிபிஐ வழக்கு பதிவு செய்தது.

    இந்த மோசடி வழக்கில் ராமானுஜம் சேஷரத்தினம் மற்றும் சுதர்சன் வெங்கட்ராமன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்தனர்.

    இந்த மனுவை விசாரித்த நீதிபதி வேங்கடசாமி, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் பல வங்கிகளில் ரூ.740 கோடி முறைகேடு செய்ததாக 3 வழக்குகள் பதிவாகியுள்ளன. இருவரும் அமெரிக்க குடிமக்கள் என்பதால், அவர்களுக்கு ஜாமின் வழங்கப்பட்டால் அவர்கள் அமெரிக்காவுக்கு தப்பி செல்ல வாய்ப்பிருப்பதால், இருவரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்கிறேன். மேலும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட வங்கிகளின் அதிகாரிகளை ஏன் கைது செய்யவில்லை என கேள்வி எழுப்பிய நீதிபதி,

    திருநெல்வேலியில் நகை கடனை திருப்பி செலுத்தியும், வங்கி அதிகாரிகள் நகையை திருப்பி தராததால் விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்டதை சுட்டிக்காட்டியதோடு, உயர் வர்க்கத்தை சேர்ந்தவர்களுக்கு ஒரு வகையான சலுகையும், ஏழைகளுக்கு வங்கிகள் நெருக்கடி கொடுத்து வருவதாகவும் வேதனை தெரிவித்தார்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad