15 வயதுச் சிறுமியை கூட்டு பாலியல் துன்புறுத்தல், ஃபேஸ் புக்கில் நேரலை.
அமெரிக்காவில் 15 வயதுச் சிறுமியை கூட்டுப் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட சிலர் அதனை ஃபேஸ்புக்கில் நேரலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சிகாகோவைச் சேர்ந்த இந்த சிறுமி கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டில் இருந்து கடைக்கு பொருள் வாங்கச் சென்ற நிலையில் காணவில்லை. இது தொடர்பாக சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் அந்தச் சிறுமி பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட சம்பவம் ஃபேஸ்புக் நேரலையில் வெளியான தகவல் சிறுமியின் பெற்றோரையும், போலீசாரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஃபேஸ்புக் நேரலையில் இந்த சம்பவத்தை பார்த்துக்கொண்டிருந்த எவரும் தகவல் தெரிவிக்கவில்லை என்று தெரிவித்துள்ள போலீசார், தொடர்புடைய அனைவரையும் பிடிக்க விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை