Header Ads

  • BREAKING



    தமிழக அமைச்சர்களுக்கு தலா ரூ.17 லட்சம் மதிப்பிலான 30 இன்னோவா கிரிஸ்டா கார்கள்.

    தமிழக அமைச்சர்களுக்கு வழங்குவதற்காக 30 புதிய கார்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அமைச்சரவையில் அவர் உள்பட 31 அமைச்சர்கள் உள்ளனர். இந்நிலையில் அமைச்சர்கள் பயணிப்பதற்காக தலா 17 லட்சம் ரூபாய் மதிப்பிலான 30 இன்னோவா கிரிஸ்டா ரக கார்கள் வாங்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகை முன்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கார்கள் மீது சிவப்பு நிற விளக்குகள் பொருத்தப்பட்டு தயார் நிலையில் உள்ளன. சில கார்களுக்கு 2525, 9999 என்ற ஃபேன்சி எண்கள் வாங்கப்பட்டுள்ளன. அமைச்சர் செங்கோட்டையன் ஏற்கனவே புதிய காரை பயன்படுத்தி வருகிறார். விரைவில் இந்தக் கார்கள் அமைச்சர்களுக்கு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad