Header Ads

  • BREAKING



    ஜல்லிக்கட்டு: மாடு முட்டியதால் 2 பேர் சாவு;69 பேர் காயம்.

    புதுக்கோட்டைபுதுக்கோட்டை அருகே திருவப்பூரில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு முட்டி 2 பேர் சாவு. 69 பேர் காயமடைந்துள்ளனர்.

    புதுக்கோட்டை அருகே திருவப்பூர் அருள்மிகு முத்துமாரியம்மன் கோயில் மாசிப்பெருந்திருவிழாவை முன்னிட்டு இன்று ஞாயிற்றுக்கிழமை ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில், சுமார் 500 வீரர்கள் மாடு பிடிக்கப் பதிவு செய்திருந்தனர்.

    நிகழ்ச்சியை மாவட்ட காவல்கண்காணிப்பாளர் ஜெ. லோகநாதன் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை காலை 9 மணிக்கு தொடங்கி வைத்தார். திருச்சி, மணப்பாறை, மதுரை, புதுக்கோட்டை உள்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுமார் 350 காளைகள் தொழுவத்திலிருந்து ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன.

    இதில், ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை வேடிக்கை பார்க்க வந்த புதுக்கோட்டை காமராஜபுரம் 20-ஆம் வீதியைச் சேர்ந்த சையதுஇப்ராகிம் மகன் வாசீம்(20), அன்னவாசல் அருகே எல்லைப்பட்டியைச் சேர்ந்த மாணிக்கம் மகன் வெள்ளைச்சாமி(50) ஆகியோர் மாடுமுட்டி உயிரிழந்தனர்.

    மேலும், காளைகளை அடக்க முயன்ற வீரர்கள 69 பேர் காயமடைந்தனர். இதில், ஜல்லிக்கட்டுத் தளத்தில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவ சிகிச்சை மையத்தில் முதலுதவி சிகிச்சை பெற்ற 34 பேர் மேல் சிகிச்சைக்காக புதுகை அரசு மருத்துவமனைக்கு அவசர ஊர்தி மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். அதில், படுகாயமுற்ற மேலக்காயாம்பட்டி மெய்யர் மகன் செந்தில்குமார்(34), நமனசமுத்திரம் மல்லாங்குடி துரை மகன் அலெக்ஸ்(17), அறந்தாங்கி கள்ளிச்சந்து முத்து மகன் வீரராகவன்(20) ஆகிய 3 பேர் உயர் தீவிர சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad