Header Ads

  • BREAKING



    டிசம்பர் 31-க்குள் ஆதாருடன் இணைக்காவிட்டால் PAN கார்டு செல்லாது.

    இந்த ஆண்டு இறுதிக்குள் ஆதாருடன் இணைக்காவிட்டால், பேன் கார்ட் செல்லாது எனக் கூறப்படுகிறது.
    80-க்கும் மேற்பட்ட சேவை மற்றும் சலுகைகளைப் பெற ஆதார் அவசியமாகும் நிலையில், ஆதாரின் பயன்பாட்டை மேலும் அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நிதி மசோதா திருத்தப்படி வருமானவரித்தாக்கல் செய்பவர்கள் பேன் கார்டை ஆதார் கார்டுடன் கட்டாயம் இணைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வருமான வரி செலுத்துபவர்கள் மட்டும் இன்றி, பேன் கார்டை அடையாள ஆவணமாக வைத்திருப்பவர்களும் ஆதார் கார்டுடன் அதை இணைக்க வேண்டும் என சொல்லப்படுகிறது. டிசம்பர் 31-க்குள் இந்த இணைப்பை மேற்கொள்ளாவிட்டால் பேன் கார்ட் செல்லுபடி ஆகாமல் போக வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad