Header Ads

  • BREAKING



    நாடு முழுவதும் 31 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு இன்று ஒப்பந்தம்.

    புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல், காரைக்கால் உட்பட 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு இன்று ஒப்பந்தம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.நாடு முழுவதும் ஹைட்ரோ கார்பன் எடுக்க தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுடன் மத்திய அரசு இன்று ஒப்பந்தம் கையெழுத்திட உள்ளதாக கூறப்படுகிறது. இதில் தமிழகத்தின் நெடுவாசல், புதுச்சேரியின் காரைக்கால் உட்பட மொத்தம் 31 இடங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 31 ஒப்பந்ததாரர்களுடனான ஒப்பந்தம் டெல்லியில் உள்ள தாஜ் மான்சிங் நட்சத்திர ஹோட்டலில் கையெழுத்தாக உள்ளது என்றும், மத்திய அரசு மற்றும் ஏலம் எடுத்த நிறுவனங்கள் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகும் நிகழ்ச்சிக்கு பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமை வகிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அகழ்வு பணிகளை தொடங்குவதற்கு, இந்த ஒப்பந்தம் இறுதியானது அல்ல என்றும், இதன் பிறகு சம்மந்தப்பட்ட நிறுவனங்கள் கனிமவளச் சுரங்கக் குத்தகை, சுற்றுச்சூழல், மாசுக்கட்டுபாடு உட்பட சுமார் 30 வகையான அனுமதியை பெறவேண்டும் என்றும் கூறப்படுகிறது.


    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad