31 புதிய நகரங்களுக்கு விமானப் போக்குவரத்து சேவை திட்டம்.
இந்தியாவில் விமான சேவை இல்லாத 31 புதிய நகரங்களுக்கு இந்த ஆண்டில் விமானப் போக்குவரத்து தொடங்கப்ப உள்ளது. உள்நாட்டு விமான சேவையில் ஜப்பானை பின்னுக்கு தள்ளி இந்தியா மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. உள்நாட்டு விமான சேவையை மேலும் மேம்படுத்தும் நோக்கில் மலிவு விலையில் விமான சேவை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. பயணக் கட்டணமாக ஒரு மணிநேரத்துக்கு 2 ஆயிரத்து 500 ரூபாய் என்ற கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஸ்பைஸ் ஜெட், அலைன்ஸ் ஏர், ஏர் டெக்கான், ஏர் ஒடிசா, டர்போ மெகா போன்ற 5 விமான நிறுவனங்கள் மூலம் ஏப்ரலில் இருந்து செப்டம்பர் மாதத்திற்குள் இந்த சேவை தொடங்கப்பட உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அடுத்த இரு ஆண்டுகளில் 50 விமான நிலையங்களை புதுப்பித்து சிறிய நகரங்களுக்கும் விமான சேவையை தொடங்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
கருத்துகள் இல்லை