Header Ads

  • சற்று முன்



    நியூயார்க் பட விழாவில் 3 தமிழ்ப் படங்கள்.

    நியூயார்க்கில் நடக்கும் இந்திய திரைப்பட விழாவில் மூன்று தமிழ்த் திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.

    அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இந்திய திரைப்பட விழா ஒவ்வொரு வருடமும் நடக்கிறது. இந்தாண்டுக்கான விழா, மே மாதம் நடக்க இருக்கிறது. இதில் இந்தியாவில் இருந்து பல்வேறு படங்கள் திரையிடப்படுகின்றன. தமிழில் சினிமாவில் இருந்து சுரேஷ் சங்கையா இயக்கத்தில் விதார்த் நடித்துள்ள ஒரு கிடாயின் கருணை மனு, கதிர் நடித்துள்ள சிகை, லெனின் பாரதி இயக்கியுள்ள மேற்கு தொடர்ச்சி மலை ஆகிய படங்கள் திரையிடப்படுகின்றன.

    இதுபற்றி ஒரு கிடாயின் கருணை மனு பட இயக்குனர் சுரேஷ் சங்கையா கூறும்போது, ‘மே மாதம் 6-ம் தேதி தமிழ்ப் படங்கள் திரையிடப்பட இருக்கின்றன. அதற்காக நாங்கள் அங்கு செல்ல இருக்கிறோம். இன்னும் சில பட விழாக்களில் இந்தப் படம் திரையிடப்பட இருக்கிறது’ என்றார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad