Header Ads

  • BREAKING



    ஆப்ரிக்க நாடான காங்கோவில் 40 போலீசார் தலை துண்டித்து கொலை.

    ஆப்பிரிக்க நாடான காங்கோவில் போலீஸ் அதிகாரிகள் 40 பேரின் தலையை தீவிரவாதிகள் துண்டித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந் நாட்டின் கசாய் மாகாணத்தில் ஆதிக்கம் செலுத்தும் ‘காம்வினா நசபு’ என்ற தீவிரவாத அமைப்பின் தலைவர் ஜீன் பியர்ரே பண்டியை பாதுகாப்பு படைகள் கடந்த ஆகஸ்டு மாதம் கொன்று விட்டன. அதைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்பு படைகளுக்கு எதிரான தாக்குதலை தீவிரப்படுத்திய தீவிரவாதிகள், போலீஸ் வாகனத்தை தாக்கி, அதில் இருந்த அதிகாரிகளை சிறைப்பிடித்தனர். சிறைப்பிடிக்கப்பட்ட 40 பேரின் தலையைத் துண்டித்து கொலை செய்த தீவிரவாதிகள், உள்ளூர்மொழி பேசிய 6 மட்டும் விடுவித்தனர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad