மருத்துவர் தாக்கப்பட்டதைக் கண்டித்து போராடிய 4,000 மருத்துவர்களில் 301 பேர் சஸ்பெண்ட்.
மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் மருத்துவர் ஒருவர் தாக்கப்பட்டதாகக் கூறி நடக்கும் போராட்டத்தில் பங்கேற்ற 301 மருத்துவர்கள் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர். கடந்த வாரம் சியான் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் நோயாளி ஒருவர் உயிரிழந்ததையடுத்து ஆத்திரமடைந்த உறவினர்கள் மருத்துவரைத் தாக்கியதாக குற்றம் சாட்டப்படுகிறது. இதையடுத்து பாதுகாப்பான பணிச்சூழலை உறுதிப்படுத்தக் கோரி கடந்த சில நாட்களாக மாநிலம் முழுவதும் 4 ஆயிரம் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மருத்துவ சேவை பாதிக்கப்பட்டதை அடுத்து பணிக்குத் திரும்பாவிட்டால் மருத்துவப் பதிவு ரத்து செய்யப்படும் என மாநகராட்சியும், இன்று இரவு 8 மணிக்குள் பணியில் ஈடுபடாவிட்டால் 6 மாத சம்பளம் வழங்கப்படாது எனசுகாதாரத்துறையும் எச்சரித்துள்ளன. இதனிடையே, போராட்டத்தில் ஈடுபட்ட 301 மருத்துவர்களை சஸ்பென்ட் செய்துள்ளதாக நாக்பூர் மருத்துவக் கல்லூரி டீன் அறிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை