6,500 திரைகளில் ’பாகுபலி2’ரிலீஸ்!
நாடு முழுவதும் 6,500 திரைகளில் வெளியிடப்படுவதன் மூலம் ’பாகுபலி 2’ திரைப்படம் புதிய சாதனை படைத்துள்ளது.
இதுவரை இந்த அளவு அதிக திரைகளில் எந்தப் படமும் வெளியிடப்படவில்லை என்ற நிலையில், ’பாகுபலி 2’ படம் இந்த சாதனை படைத்துள்ளது. சல்மான் கான் நடித்த சுல்தான் திரைப்படம் 4,350 திரைகளில் வெளியானதுதான் இதற்கு முந்தைய அதிகபட்ச அளவாக இருந்தது. அமீர்கானின் ’தங்கல்’ படம் 4 ,300 திரைகளில் வெளியானது. ஏற்கனவே, ’பாகுபலி 2’ முன்னோட்டக் காட்சிகள் இணைய தளங்களில் வெளியாகி, அதைக் கண்டவர்கள் எண்ணிக்கையில் புதிய சாதனை படைத்திருந்தது.
கருத்துகள் இல்லை