சென்னை, டெல்லி உள்பட 9 நகரங்களில் இந்தாண்டு கடும் வெப்பம் தாக்கும்.
சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா உள்பட நாட்டின் 9 நகரங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து கொண்டே இருக்கும் என்று அமெரிக்க ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவின் தேசிய அறிவியல் அகாடமி சார்பில் உலக வெப்பமயமாதல் குறித்த ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வின் முடிவின்படி, உலகம் முழுவதும் 44 நகரங்களில் இந்தாண்டு முதல் வெப்பத்தின் தாக்கம் கடுமையாக அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புவி வெப்பமயமாதல், காற்றின் வெப்பநிலை அதிகரிப்பு, அதிகரித்து வரும் மக்கள் தொகை ஆகியவையே இதற்கு காரணம் என்றும் கூறப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை