Header Ads

  • BREAKING



    தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை.

    புதுச்சேரியில் இன்று காலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தநிலையில், நண்பகல் முதல் பரவலாக மழைபெய்து வருகிறது. வில்லியனூர், பங்கூர், தென்னல், கண்டமங்கலம் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், கடந்த பல மாதங்களாக கடும் வெயிலில் அவதியடைந்து வந்த பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    திருவாரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை முதல் மழை பெய்து வருகிறது. வாளவாய்க்கால், புலிவலம், விளமல், காட்டூர், குடவாசல் ஆகிய பகுதிகளில் பரவராக மழை பெய்து வருகிறது, இந்த மழையால் கடந்த ஒரு மாத காலமாக இருந்த வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
    கடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலையில் மிதமான மழை பெய்தது.
    நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால், கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறை, புட்பவனம் உள்ளிட்ட கடலோர கிராமங்களில் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. மேலும், வேதாரண்யத்தில் 10 ஆயிரம் ஏக்கர் உப்பளங்கள் மழைநீரில் மூழ்கியதால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad