Header Ads

  • BREAKING



    போலீஸாரிடமிருந்து தப்பி ஓட முயன்ற ரவுடி நான்காவது மாடியிலிருந்து கீழே விழுந்து பலி.

    சென்னையில் போலீஸார் விரட்டியதால், நான்காவது மாடியில் இருந்து கீழே விழுந்து காயமடைந்த ரௌடி இறந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

    துரைப்பாக்கம் கண்ணகிநகரைச் சேர்ந்தவர் மோவின் (35).இவர் மீது அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருக்கின்றன.குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மோதின் சில நாள்களுக்கு முன்புதான் வெளியே வந்தார்.

    இந்நிலையில் மோவினுக்கும்,அதேப் பகுதியைச் சேர்ந்த மோகனாவுக்கும் இடையே முன்பகை இருந்ததாக கூறப்படுகிறது. இதில் மோகனாவை, மோவினுக்கும் இடையே கடந்த 20-ஆம் தேதி தகராறு ஏற்பட்டது.தகராறு முற்றவே மோகனாவை மோதின் தாக்கினார்.

    இதில் காயமடைந்த மோகனா,கண்ணகிநகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

    அந்த புகாரின் அடிப்படையில் போலீஸர் வழக்குப் பதிவு செய்து, மோவினை தேடினர். இந்நிலையில் மோவின்,கண்ணகிநகர் குடிசை மாற்றுவாரிய குடியிருப்பு 10வது செக்டாரில் உள்ள 4 மாடி கட்டடத்தில் இருப்பதாக போலீஸருக்கு தகவல் கிடைத்தது. 

    அந்த தகவலின் அடிப்படையில் போலீஸார், அந்தப் பகுதிக்கு அன்று இரவு சென்றனர்.அப்போது அங்கு மதுபோதையில் 4வது மாடியில் இருந்த மோவின் போலீஸரை பார்த்ததும் ஓடினார். இதில் ஒரு மாடியில் அடுத்த மாடிக்கு தாவ முயன்றபோது, மோதின் கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.

    இச் சம்பவத்தில் பலத்த காயமடைந்த மோவின்,சென்னை ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு மோவின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.இந்நிலையில் மோவின் திங்கள்கிழமை காலை இறந்தார்.

    இது குறித்து கண்ணகிநகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.மேலும் ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்கு கண்ணகிநகர் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad