வெளியானது ஆரியாவின் கடம்பன் பட ட்ரெய்லர்.
மஞ்சப்பை படத்தின் இயக்குனர் ராகவன் இயக்கத்தில் ஆரியா காட்டுவாசி வேடத்தில் நடிக்கும் கடம்பன் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இப்படத்தில் ஆரியாவிற்கு ஜோடியாக கேத்தரின் தெரசா நடித்துள்ளார்.
தான் வாழும் காட்டை அழிக்க நினைப்பவர்களுடன் ஆரியா போராடி, சண்டைப்போட்டு எப்படி அந்த காட்டை காப்பாற்றுகிறார் என்பது படத்தின் கதையாக இருக்கும் என்று ட்ரெய்லர் உணர்த்துகிறது. இப்படத்தின் ட்ரெய்லரை நடிகர்கள் மாதவன் மற்றும் சூர்யா ட்விட்டரில் வெளியிட்டுள்ளனர்.
இதேபோல, இயக்குனர் விஜய் இயக்கத்தில் ஜெயம் ரவி வனமகன் என்னும் திரைப்படத்தில் காட்டுவாசியாக நடிக்கிறார். இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. தமிழில் டார்ஜான் பாணியில் கஷ்டப்பட்டு நடித்து வரும் ஹீரோக்களுக்கு வெற்றி கிடைக்குமா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
கருத்துகள் இல்லை