Header Ads

  • BREAKING



    கீழடி அகழாய்வு பிரிவு தலைவர் அமர்நாத் அசாமுக்கு பணியிடமாற்றம்!

    மதுரைகீழடி அகழாய்வு பிரிவு தலைவராக பணிபுரிந்த அமர்நாத் அசாமுக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
    கடந்த 2015ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை மத்திய அரசின் தொல்லியல் துறை சார்பில் சிவகங்கை மாவட்டம் கீழடியில் 2 கட்டங்களாக அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில், 5 ஆயிரத்து 300 பழங்காலப் பொருள்களும், தமிழ் பிராமி எழுத்துக்களும் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. பண்டைத் தமிழர் வாழ்வியலை அறியமுடிந்தது. இவை அனைத்தும் குறைந்தது 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானவை என்று நம்பப்படுகிறது. கீழடியில் நடைபெற்ற தொல்லியல் அகழாய்வின் காரணமாக உலகம் முழுவதும் தனிக் கவனத்தைப் பெற்றது.
    இந்த அகழாய்வின் மூலம் தமிழர்களின் வரலாற்றுத் தொன்மை குறித்த பல்வேறு புதிய தகவல்கள் கிடைத்தன.
    இரண்டாம் கட்ட அகழாய்வில் இங்கு மிகப் பெரிய சாயத் தொழிற்சாலை இருந்ததை ஆய்வாளர்கள் வெளிக்கொணர்ந்தனர்.
    மூன்றாம் கட்ட அகழாய்வு உடனடியாக தொடங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்தும் மத்திய தொல்லியல் துறைக்கு அழுத்தம் வரத் தொடங்கியது. இதற்காக தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சியினரும் ஒற்றுமையுடன் குரல் எழுப்பினர்.
    கடந்த மாதம் மூன்றாம் கட்ட அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதியளித்திருந்தது. அதற்கும் விரைவாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும், ஆய்வினை விரைந்து தொடங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப்பெற்று வந்தது.
    இந்நிலையில், கீழடி அகழாய்வுக்குழுவின் பொறுப்பாளர் அமர்நாத் அசாம் மாநிலத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
    கீழடி ஆய்வை நடத்தாமல் தள்ளிப்போடுவதற்கான மத்திய அரசின் திட்டமாக இருக்கக்கூடும் என பலரும் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad