Header Ads

  • BREAKING



    நியூட்ரினோ ஆய்வுத்திட்டம், சுற்றுச்சூழல் அனுமதியை ரத்து செய்தது தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம்.

    தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் வழங்கியிருந்த அனுமதியை நேற்று திங்கள்கிழமை ரத்து செய்து தேசிய பசுமைத் தீர்ப்பாய தென்மண்டல அமர்வு உத்தரவிட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

    தேவாரம் அருகே பொட்டிப்புரத்தை அடுத்துள்ள ராமகிருஷ்ணாபுரம் அம்பரப்பர் மலையில், நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கும் பணிகளை கடந்த 2015, ஜனவரி மாதம் மத்திய அரசு தொடங்கியது. இத்திட்டத்துக்கு பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன.

    இந்நிலையில், நியூட்ரினோ ஆய்வு திட்டத்தால் சுற்றுச் சூழல் மற்றும் வன விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படும் என, பூவுலகின் நண்பர்கள் அமைப்பினர் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த வழக்கில், நியூட்ரினோ ஆய்வகத்துக்கு தேசிய வன விலங்கு வாரியத்தின் அனுமதி பெறவில்லை என்றும், சுற்றுச்சூழல் ஆய்வு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட வில்லை என்றும் கூறி, நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் வழங்கியிருந்த அனுமதியை ரத்து செய்து, தேசிய பசுமைத் தீர்ப்பாய தென்மண்டல அமர்வு உத்தரவிட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

    நியூட்ரினோ ஆய்வுத் திட்டம் அன்று முதல் இன்று வரை கடந்து வந்த பாதை:
    1956 - இந்தியாவில் முதன் முதலாக நியூட்ரினோ, கோலார் தங்க வயல் சுரங்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
    2002 - மத்திய அணுசக்தித் துறையிடம் நியுட்ரினோ திட்டம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
    2009 - சுற்றுச்சுழல் துறை நியுட்ரினோ திட்டத்திற்கு அனுமதி மறுத்தது.
    2010 - தேனி மாவட்டம், பொட்டிபுரத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அனுமதி அளித்தது.
    2012 - நியுட்ரினோ திட்டத்துக்கான நிலங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
    2015 - நியுட்ரினோ திட்டத்திற்கு மத்திய அரசு 1500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தது.
    2015 - நியூட்ரினோ ஆய்வு மையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வைகோ வழக்கு தொடர்ந்தார்.
    2015 - தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் இருந்து உரிய அனுமதி பெறும்வரை ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள உயர்நீதிமன்ற கிளை தடை விதித்தது
    2015 - பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் சுந்தரராஜன் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.
    2016 - நியூட்ரினோ திட்டம் தொடர்பாக ஆய்வு செய்ய நிபுணர்கள் குழு அமைக்க தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் உத்தரவிட்டது.
    2017 - நியூட்ரினோ ஆய்வகத்திற்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியை ரத்து செய்தது தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad