Header Ads

  • BREAKING



    தேனியில் நியூட்ரினோ ஆய்வகம் உறுதி: மத்திய அரசு.

    தேனியில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கப்படுவது உறுதி என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு மக்களவையில் எழுத்துப் பூர்வமான பதிலை அணுசக்தித் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் தாக்கல் செய்தார். அதில், நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கும் திட்டத்தை தமிழகத்திலிருந்து வேறு மாநிலத்துக்கு மாற்றும் திட்டமில்லை என்று தெரிவித்துள்ளார். நியூட்ரினோ திட்டத்தை கேரள அரசு எதிர்க்கவில்லை என்று கூறியுள்ள அவர், தேனியில் நியூட்ரினோ ஆய்வகம் அமைப்பது உறுதி என்று தெரிவித்துள்ளார். தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி கிடைக்காததால், திட்டம் செயல்படுத்தப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தனது பதிலில் தெரிவித்துள்ளார்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad