மெரினாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிப்பு.
ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பின் மெரினா கடற்கரை போலீசாரின் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறது. இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு ஒப்பந்தம் கையெழுத்திட்டதை அடுத்து, மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த முன்வருமாறு அழைப்பு விடுத்து சமூகவலைதளங்களில் தகவல் பரவியது. இதைனைத் தொடர்ந்து மதியம் முதல் மெரினாவில் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர்.
திறந்திருந்த கடைகளை அடைக்குமாறு வியாபாரிகளை வலியுறுத்தியதுடன், பொதுமக்கள் உள்ளே வருவதற்கும் போலீசார் கெடுபிடி செய்ததால் மெரினா கடற்கரை வெறிச்சோடி காணப்பட்டது. அத்துமீறி யாரும் நுழைந்துவிடக்கூடாது என்பதற்காக தடுப்புகளும் வைக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்ட தகவலை நம்பி மெரினா கடற்கரைக்கு வந்த இளைஞர்கள் 10 பேரை போலீசார் பிடித்து சென்றனர்.
மெரினா கடற்கரையில் மீண்டும் போராட்டம் நடத்தப் போவதாக சமூக வலைதளங்களில் தேவையற்ற வதந்திகளைப் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மயிலாப்பூர் காவல் துணை ஆணையர் பாலகிருஷ்ணன் எச்சரித்தார்.

கருத்துகள் இல்லை