பறந்து கொண்டிருக்கும் போது தீ பிடித்து எரிந்த விமானம்.
பெரு நாட்டின் தலைநகரான லிமாவிலிருந்து தெற்கு அமெரிக்காவுக்கு கிளம்பிய பயணிகள் விமானத்தின் இறக்கையில் திடீரென தீப்பற்றி எரிந்தது.
பெரு நாட்டிலிருந்து பெருவியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் 141 பயணிகளுடன் அமெரிக்காவுக்கு புறப்பட்டது. வானத்தில் பறந்து கொண்டிருக்கும் போது அந்த விமானத்தின் வலது பக்க இறக்கை திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த விமானி, விமானத்தை அவசர அவசரமாக ஜாஜா நகரில் உள்ள விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கினார். பின்னர் விமானத்தில் இருந்த பயணிகள் வெளியேற்றபட்டனர். விமானியின் சாதுர்யத்தால் பயணிகள் காயங்கள் இன்றித் தப்பினர்.விமானம் தீப்பற்றி எரியும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
கருத்துகள் இல்லை