Header Ads

  • BREAKING



    ஜிப்மர் மருத்துவக் கல்லூரி நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பம் வழங்கல்.

    புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ கல்லூரியில் முதலாமாண்டு எம் பி பி எஸ் படிப்பில் சேர நடைபெறும் நுழைவு தேர்வுக்கு இன்று முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று ஜிப்மர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
    மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டுவரும் அந்தக் கல்லூரியில் ஜூன் 4 ம் தேதி நுழைவுத்தேர்வு நடைபெற உள்ளது. இதையொட்டி, விண்ணப்பங்கள் வழங்கும் நிகழ்ச்சி ஆன்லைன் மூலம் இன்று முதல் காலை 11 மணிக்கு தொடங்குகிறது. மே மாதம் 3-ந் தேதி மாலை 5 மணிக்குள் இதற்கான விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். ஆன்லைன் மூலம் நடைபெறும் இந்த நுழைவு தேர்வு வரும் ஜூன் 4-ந் தேதி புதுச்சேரி, சென்னை, ஐதராபாத், திருவனந்தபுரம், பெங்களூர் உள்பட 75 நகரங்களில் 270 மையங்களில் நடைபெறவுள்ளது. இந்த தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் நேர்முக தேர்வுக்கு அழைக்கப்படுவர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad