அமெரிக்கா விதிக்கும் தடைகளை கண்டு அஞ்சப்போவதில்லை – வடகொரிய அரசு.
அமெரிக்கா கொண்டு வரும் தடைகள் மீது தங்களுக்கு பயம் இல்லை, தொடர்ந்து அணுசக்தி திட்டங்களை மேற்கொள்வோம் என்று வடகொரியா தெரிவித்துள்ளது.வடகொரியா எத்தகைய ஏவுகணைகளையும், அணு ஆயுதங்களையும் சோதனை நடத்தக்கூடாது என ஐ.நா.சபை தடைவிதித்துள்ளது. எச்சரிக்கையும் விடுத்துள்ளது. அதேபோல், அமெரிக்காவும் வடகொரியா மீது பல்வேறு பொருளாதார தடைகளை கொண்டு வருகின்றது.
இந்நிலையில், ஐ.நா.விற்கான வடகொரியாவின் துணைத் தூதர் சோ மியாங் நாம் கூறுகையில், நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யவே ஏவுகணை சோதனைகள் நடைபெறுகின்றன என்றார். அமெரிக்கா கொண்டு வரும் தடை கொடிய, மனிதாபிமானமற்ற செயல் ஆகும் என்ற அவர் தடைகளை கண்டு வடகொரியா அஞ்சாது என்றார். வட கொரியா மீண்டும் நடத்திய புதிய ஏவுகணை சோதனை தோல்வி அடைந்ததாக தென் கொரிய அரசு தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை