Header Ads

  • BREAKING



    பாலியல் பலாத்கார வழக்கில் தேடப்பட்ட முன்னாள் அமைச்சர் காயத்ரி பிரஜாபதி கைது.

    பாலியல் பலாத்கார வழக்கில் தேடப்பட்ட உத்தரப்பிரதேச மாநில முன்னாள் அமைச்சர் காயத்ரி பிரஜாபதி கைது செய்யப்பட்டுள்ளார். பாலியல் பலாத்காரம் செய்ததாக காயத்ரி பிரஜாபதி உள்பட 7 பேர் மீது  வழக்குப்பதிவு செய்யப்பட்டதை அடுத்து, அவர் தலைமறைவானார். தேடுதல் வேட்டையை  போலீசார் தீவிரப்படுத்திய நிலையில், பிரஜாபதியின் நெருங்கிய உதவியாளர் சந்திரபால் சிங் லக்னோவில் சரணடைந்த நிலையில், அசோக் திவாரி மற்றும் ஆசிஷ் சுக்லா ஆகியோரையும் நொய்டாவில் போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில், முன்னாள் அமைச்சர் காயத்ரி பிரஜாபதியை தேடி வந்த போலீசார், லக்னோவில் இன்று காலை கைது செய்தனர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad