Header Ads

  • BREAKING



    கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணனுக்கு வாரண்ட் பிறப்பித்து உச்சநீதிமன்றம் உத்தரவு.

    நீதிபதிகள் மற்றும் ஓய்வுபெற்ற நீதிபதிகளின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில், அவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு எழுப்பி, நாட்டின் தலைமை நீதிபதிக்கு, நீதிபதி கர்ணன் கடிதம் எழுதியுள்ளார். இதன்மூலம் நீதித்துறைக்கு கெட்டபெயர் ஏற்படுத்தி, நீதிநிர்வாகத்திற்கு இடையூறு செய்ததாக நீதிபதி கர்ணன் மீது ஏன் அவதூறு வழக்கு தொடரக்கூடாது என நோட்டீஸ் அனுப்புமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மூத்த நீதிபதிகள் 7 பேர் அடங்கிய அமர்வு, கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி இந்த உத்தரவை பிறப்பித்தது. உச்சநீதிமன்றம் உத்தரவிட்டபடி, நீதிபதி கர்ணன் பிப்ரவரி 13ஆம் தேதி நேரில் ஆஜராகத் தவறியதை அடுத்து, அவருக்கு மேலும் 3 வார கால அவகாசம் வழங்குவது என நீதிபதிகள் முடிவு செய்தனர். அதன் பிறகும் நீதிபதி கர்ணன் உச்சநீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதையடுத்து, நீதிபதி கர்ணனுக்கு எதிராக, பிணையில் வெளிவரக்கூடிய கைது ஆணை பிறப்பித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேற்கு வங்க காவல்துறை டிஜிபி நீதிபதி கர்ணனிடம் கைது ஆணையை வழங்குவார் என்றும் உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad