அரசு இல்லத்தை காலி செய்து, வீனஸ் காலனிக்கி குடிபெயர்ந்தார் ஓ.பி.எஸ்!
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், புது வீட்டுக்குக் குடிபெயர்ந்துள்ளார். போயஸ்கார்டன் அருகே உள்ள ஆழ்வார்பேட்டை, வீனஸ் காலனி முதல் தெருவில் உள்ள வீட்டுக்குக் குடிபெயர்ந்துள்ளார். சசிகலாவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் போர்க்கொடி தூக்கியதற்குப் பிறகு, எடப்பாடி பழனிசாமி முதல்வரானார். சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பிலும் எடப்பாடி பழனிசாமி வெற்றிபெற்றார். இதையடுத்து, க்ரீன்வேஸ் சாலையில் அவர் தங்கியிருந்த அரசு இல்லத்தைக் காலிசெய்யக் கூறி, அவருக்கு நெருக்கடிகொடுக்கப்பட்டு வந்தது. இதன் காரணமாக அவர் வீடு தேடிக்கொண்டிருந்தார்.
இந்நிலையில், க்ரீன்வேஸ்சாலை அரசு இல்லத்தைக் காலிசெய்துவிட்டு, இன்று வீனஸ் காலனி இல்லத்துக்கு குடிபெயர்ந்துள்ளார் பன்னீர்செல்வம்.
கருத்துகள் இல்லை