தம்பதியினர் போல் நடித்து தனியாக இருந்த பெண்ணைத் தாக்கி திருட முயன்றவர்கள் பிடிபட்டனர்.
ஓசூர் முனிஸ்வர நகர் பகுதியில், வீடு வாடகைக்கு கேட்பது போல் வந்த இருவர், தனியாக இருந்த பெண்னை கொலை செய்து நகை, பணத்தையும் திருட நடந்த முயற்சி இன்று மதிய வேளையில் முறியடிக்கப்பட்டது.
பார்பதற்கு இளம் தம்பதி போல் உள்ள இவர்கள், வாடகைக்கு வீடு கேட்டு உள்ளே நுழைந்து தனியாக இருந்த வீட்டுக்காரப் பெண்னை கழத்தை நெறித்துள்ளனர். அந்த பெண் எப்பிடியோ சமாளித்து கூச்சலிடவே, அக்கம் பக்கத்தினர் அந்த இரண்டு திருடர்களை சுற்றி வளைத்து பிடித்துள்ளனர்.
அவர்களிடம் இருந்து கைப்பற்ற கைப்பையில் திருட்டு மற்றும் தேவைப்பட்டால் கொலை செய்யப் பயண்படும் ஆயுதங்களும் இருந்தது. தற்போது காவல்துறை வசம் ஒப்படைக்க பட்டு விட்டனர்.
கருத்துகள் இல்லை