Header Ads

  • BREAKING



    சென்னைக்கு வழங்கப்பட்டு வந்த கிருஷ்ணா நதிநீர் இன்றுடன் நிறுத்தம்.

    சென்னையின் குடிநீர் தேவைக்கு வழங்கப்பட்டு வந்த கிருஷ்ணா நதிநீர் இன்றுடன் நிறுத்தப்படுவதாக,
    ஆந்திர அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தகவல் தெரிவித்துள்ள தெலுங்கு கங்கா திட்ட முதன்மை பொறியாளர் சுதாகர் பாபு, தமிழக – ஆந்திர ஒப்பந்தபடி, இந்த ஆண்டு 2 புள்ளி 5 டி.எம்.சி தண்ணீர் வழங்கப்பட வேண்டும் எனவும், தற்போதுவரை சென்னைக்கு 2 புள்ளி இரண்டு எட்டு டி.எம்.சி தண்ணீர் வழங்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இன்றைய நிலவரப்படி சோமசிலா அணையில் 13 புள்ளி ஏழு ஐந்து டி.எம்.சியும், கண்டலேறு அணையில் 6 புள்ளி மூன்று இரண்டு டி.எம்.சி தண்ணீர் மட்டும் இருப்பு உள்ளதால், சித்தூர், நெல்லூர், திருப்பதி மாவட்டங்களில் கோடை கால தேவைக்கு மட்டுமே பயன்படுத்த முடியும் எனவும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில், கண்டலேறு அனையில் இருந்து திறக்கப்படும் குறைந்த அளவு தண்ணீர் 150 கிலோமீட்டர் வரை பயணிக்காது என்பதால், சென்னைக்கு வழங்கப்பட்டு வந்த தண்ணீர் இன்று முதல் நிறுத்தப்படுவதாக சுதாகர் பாபு தெரிவித்துள்ளார்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad