உத்தரகாண்ட் மாநில முதலமைச்சராக திரிவேந்திர சிங் ராவத் தேர்வு.
உத்தரகாண்ட் மாநில முதலமைச்சராக பாஜக மாநிலத் தலைவர் திரிவேந்திர சிங் ராவத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 70 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெற்று முடிந்த தேர்தலில் பாஜக 56 இடங்களில் வெற்றிபெற்று, பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைக்க உள்ளது. இதையடுத்து, புதிய முதலமைச்சரை தேர்வு செய்ய வெள்ளிக்கிழமை மாலை டேராடூனில் பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், உத்தரகாண்ட் மாநில பாஜக தலைவர் திரிவேந்திர சிங் ராவத், சட்டமன்ற கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அவர் உத்தரகாண்ட் முதலமைச்சராக நாளை மாலை பதவியேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை