Header Ads

  • BREAKING



    மிக்சி, குக்கர், சிலிண்டர்: யாருக்கு எந்த சின்னம்?

    இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டுள்ள நிலையில், சசிகலா மற்றும் ஓ. பன்னீர் செல்வம் தரப்பினர் மாற்றுச் சின்னத்தில் போட்டியிட வேண்டும். இன்று காலை 10 மணிக்குள் இரு தரப்பினரும் தங்களுக்கு விருப்பமான சின்னங்கள் என மூன்றைத் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

    ஆர்.கே. நகர் சட்‌டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரையும் இரட்டை இலைச் சின்னத்தையும் சசிகலா தரப்பும், பன்னீர்செல்வம் தரப்பும் பயன்படுத்த முடியாது என தேர்தல் ஆணையம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.

    அதே நேரத்தில், ஆர்.கே. நகர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்குத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள சின்னங்களில் தங்களுக்கு பிடித்தமானதை இரண்டு தரப்பும் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. இன்று காலை 10 மணிக்குள் தங்கள் குழுவிற்கு என்ன பெயர் என்பதை தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்கவே‌ண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. தங்களுக்கு விருப்பமான சின்னங்கள் என மூன்றை தேர்தல் ஆணையத்திடம் கூறவேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    தற்போது பொதுபட்டியலில் 80 சின்னங்கள் உள்ளன. ஹெல்மெட், மிக்சி, குக்கர், ரேசர், சிலிண்டர், மோதிரம் உள்ளிட்ட 80 சின்னங்களில் ஒன்றை இரு அணிகளும் தேர்வு செய்ய வேண்டி வரும்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad