உயர்வுடன் முடிந்தது இந்திய பங்குச்சந்தை வர்த்தகம்.
தொடர்ந்து 3 நாள் சரிவைுக்கு பிறகு இன்று வர்த்தகம் உயர்வுடன் முடித்துள்ளன. ஆசிய பங்குச்சந்தைகள் உயர்வுடன் முடிந்தன. இந்திய பங்குச்சந்தைகள் வர்த்கம் தொடக்கம் முதலாகவே, ஏற்றத்துடன் இருந்தன. இதில் கடந்த 3 நாட்களாகக் காணப்பட்ட மந்தநிலை மறைந்து, முதலீட்டாளர்கள் பங்கு வர்த்தகத்தில் கவனம் செலுத்தியதால், முன்னணி நிறுவனப் பங்குகள் விலை உயர்ந்தன.
வர்த்தக முடிவில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் 164 புள்ளிகள் உயர்ந்து, 29,332 புள்ளிகளாக நிலைபெற்றது. நிஃப்டி 56 புள்ளிகள் அதிகரித்து, 9,086 புள்ளிகளாகவும் முடிந்தது.
கருத்துகள் இல்லை