Header Ads

  • BREAKING



    இரட்டை இலை சின்னம் முடக்கம்: தேர்தல் ஆணையம் சொன்னது என்ன?

    அதிமுகவின் அதிகாரப்பூர்வ சின்னமான இரட்டை இலை சின்னம், தங்களுக்கே சொந்தம் என்று சசிகலா மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தரப்பு தேர்தல் ஆணையத்தில் வாதங்களை முன்வைத்தன. இருதரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி, தேர்தல் ஆணையர்களுடன் 5 மணி நேரத்துக்கும் மேலாக தீவிர ஆலோசனை நடத்தினார். பின்னர்

    அதிமுகவின் அதிகாரப்பூர்வ சின்னமான இரட்டை இலை சின்னத்தை முடக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    தேர்தல் ஆணைய உத்தரவில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்:

    *அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டதில் சர்ச்சை நீடிப்பதால் இரட்டை இலை சின்னத்தை முடக்குவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    * ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக கட்சியின் பெயரையோ, சின்னத்தையோ சசிகலா மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருதரப்பினருமே பயன்படுத்தக் கூடாது.

    * இருதரப்பினருக்கும் நியாயமாகவே நடந்து கொள்ள இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இரட்டை இலை சின்னம் முடக்கப்படுவது இடைக்கால உத்தரவே.

    * ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிட, எந்த கட்சிக்கும் ஒதுக்கப்படாத ஒரு சின்னத்தை இரு தரப்பினரும் தேர்வு செய்து தேர்தல் ஆணையத்தை மார்ச் 23ம் தேதி காலை 10 மணிக்கு அணுகலாம்.

    * இருதரப்பினரும் தங்களிடமுள்ள கூடுதல் ஆவணங்களை ஏப்ரல் 17ம் தேதிக்குள் தாக்கல் செய்யலாம்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad