Header Ads

  • BREAKING



    சசிகலா தேர்வு.. டிடிவி தினகரன் பதிலை தேர்தல் ஆணையம் ஏற்க மறுப்பு.

    சசிகலா தேர்வுக்கு எதிரான முறையீட்டில் டிடிவி தினகரன் அனுப்பிய பதிலை தேர்தல் ஆணையம் ஏற்க மறுத்துள்ளது.

    அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டது செல்லாது என்று ஓபிஎஸ் தரப்பினர் தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு அளித்திருந்தனர்.

    இந்த புகார் மனுவுக்கு பதிலளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் சசிகலாவுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

    தேர்தல் ஆணையத்தின் இந்த நோட்டீசுக்கு சசிகலாவின் தரப்பில் இருந்து டிடிவி தினகரன் விளக்கம் அளித்திருந்தார். ஆனால் டிடிவி தினகரன் பதிலை தேர்தல் ஆணையம் ஏற்க மறுத்துள்ளது. அதிகாரப்பூர்வ பதவியில் தினகரன் இல்லை என்பதால், அவரது பதிலை ஏற்க முடியாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    சசிகலாவோ அல்லது தேர்தல் ஆணைய ஆவணங்களில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட வேறொரு நிர்வாகியோ பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சசிகலா கையெழுத்திட்ட கடிதத்தினை அவர் சார்பில் அங்கீகரிக்கப்பட்ட நபர் யாரேனும் கொடுக்கலாம் என கூறப்பட்டுள்ளது. வரும் மார்ச் 10-ம் தேதிக்குள் சசிகலா கையொப்பமிட்ட பதிலை அனுப்ப வேண்டும் என்று தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad